குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 30 AUG 2021 8:05AM by PIB Chennai

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,

“கிருஷ்ண ஜெயந்தி புனித தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக வணங்கப்படும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுவது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாகும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் கூறியுள்ள செய்தி ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகம் அளிக்கிறது.

நாம் அனைவரும் நமது கடமைகளை மிகவும் நேர்மையுடன் நிறைவேற்றவும், நீதியின் பாதையில் நடக்கவும் இந்தப் புனித தினத்தில் உறுதியேற்போம்.

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி பெரும் பாரம்பரியத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொவிட் காரணத்தல் நாம் எச்சரிக்கையோடு இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவோம். இந்த கிருஷ்ண ஜெயந்தி நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்.”, என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

*****



(Release ID: 1750294)


(रिलीज़ आईडी: 1750349) आगंतुक पटल : 245
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Malayalam