நிதி அமைச்சகம்
விவாத் சே விஷ்வாஸ் சட்டத்தின் பிரிவு 3-இன் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணத்திற்கான கடைசி தேதி நீட்டிப்பு
Posted On:
29 AUG 2021 2:13PM by PIB Chennai
நேரடி வரி, விவாத் சே விஷ்வாஸ் சட்டம் 2020 (இனி, “விவாத் சே விஷ்வாஸ் சட்டம்” என்று அழைக்கப்படும்) இன் கீழ் விளம்புகையாளர் செலுத்த வேண்டிய தொகை, பிரிவு 3-இல் உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 25, 2021 தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிவிக்கையில், கட்டணத்தை செலுத்துவதற்கான கடைசி தேதி (கூடுதல் கட்டணம் எதுவும் இல்லாமல்) ஆகஸ்ட் 31, 2021 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவாத் சே விஷ்வாஸ் சட்டத்தின் கீழ் கூடுதல் கட்டணத்துடன் தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31, 2021 ஆகும்.
விளம்புகையாளர் கட்டணத்தை செலுத்துவதற்கு அவசியமான படிவ எண் 3-ஐ வழங்குவதிலும் திருத்தியமைப்பதிலும் ஏற்பட்ட இடையூறுகளைக் கருத்தில் கொண்டு கூடுதல் கட்டணம் இல்லாமல் தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
எனினும் கூடுதல் கட்டணத்துடன் தொகையை செலுத்துவதற்கான கடைசி தேதியை (அக்டோபர் 31 2021) மாற்றி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750137
*****************
(Release ID: 1750184)
Visitor Counter : 331