தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியாவின் தேசிய திரைப்பட காப்பகத்தின் (NFAI) ஆன்லைன் திரைப்பட போஸ்டர் கண்காட்சி ‘‘75ம் ஆண்டில் சித்ராஞ்சலி’’ தொடக்கம்

Posted On: 27 AUG 2021 2:05PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் 75ம் ஆண்டை நாடு கொண்டாடுவதால், புனேவில் உள்ள  தேசிய திரைப்பட காப்பகம்,  ‘75ம் ஆண்டில் சித்ராஞ்சலி: ஒரு பிளாட்டினம் பனோரமாஎன்ற தலைப்பில் சிறப்பு மெய்நிகர் கண்காட்சியை  ஏற்பாடு செய்துள்ளது.

சினிமா தொகுப்புடன் கூடிய இந்த ஆன்லைன் கண்காட்சி, சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசத்தின் பயணத்தை காட்டுகிறது.  சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தை போற்றும் இந்திய சினிமாவை இந்த டிஜிட்டல் தொகுப்பு காட்டுகிறது. சமூகத்தின் உட்புறங்களை எடுத்துகூறிய, பல சமூக சீர்த்திருத்தங்களுக்கு வழிவகுத்த, பாதுகாப்பு படைகளை போற்றும் திரைப்படங்களை இது காட்டுகிறது.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளதாக, மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் கூறினார். இந்திய சினிமா நாட்டின் மென்சக்தி என்றும், உலக அரங்கில் இந்தியாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியதில் இது முக்கிய பங்காற்றியுள்ளது என அவர் கூறினார்.

மெய்நிகர் கண்காட்சி பற்றி :

சித்ராஞ்சலி @ 75’, பல மொழி சினிமாக்களின் 75 திரைப்பட போஸ்டர்கள் மற்றும் போட்டோக்கள் மூலம் தேசபக்தியின் வெவ்வேறு மனநிலைகளை காட்டுகிறது. இந்த கண்காட்சி 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது: சினிமா மூலம் சுதந்திரப் போராட்டம்’, சமூக சீர்திருத்த சினிமா, மற்றும்  தைரியமான வீரர்களை வணங்குவதுஎன்ற 3 பிரிவுகள் இதில் உள்ளன.

இந்த கண்காட்சியை பார்க்கவும், பகிரவும் இங்கே கிளிக் செய்யவும்:  https://www.nfai.gov.in/virtual-poster-exhibition.php.

இதையும் படிக்கவும்:

I&B Minister launches e-Photo Exhibition “Making of the Constitution” and Virtual Film Poster Exhibition “Chitranjali@75”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749515

*****************



(Release ID: 1749673) Visitor Counter : 262