தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

அரசமைப்பின் உருவாக்கம்: மின்னணு-புகைப்பட கண்காட்சி தொடக்கம்

Posted On: 27 AUG 2021 5:59PM by PIB Chennai

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில் கொண்டாடப்பட்டு வரும் விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, விடுதலை போராட்டத்தின் பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கும் மின்னணு-புகைப்பட கண்காட்சிகளை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வருடம் முழுக்க நடத்தவுள்ளது. இதன் முதல் பகுதியான அரசமைப்பின் உருவாக்கம்எனும் காணொலி கண்காட்சி புதுதில்லியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

முப்பது அரிய படங்களுடன் கூடிய இந்த கண்காட்சி அரசமைப்பு உருவான விதத்தை காட்சிப் படுத்துகிறது. அகில இந்திய வானொலி மற்றும் திரைப்பட பிரிவில் இருந்து பெறப்பட்ட காணொலிகள் மற்றும் உரைகளின் இணைப்புகளையும் கண்காட்சி வழங்குகிறது.

அரசமைப்பு சபையின் உருவாக்கம், அரசமைப்பு அமலுக்கு வந்தது, இந்தியாவின் முதல் குடியரசுத் தினம் போன்ற ஒட்டுமொத்த பயணத்தையும் இந்த மின்னணு-கண்காட்சி காட்சிப் படுத்துகிறது.

https://constitution-of-india.in/ எனும் இணைப்பில் இதை காணலாம்.

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், பிஓசி, பத்திரிகை தகவல் அலுவலகம், தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல அலுவலகங்கள் மற்றும் பல்வேறு அமைச்சங்களின் இணயதளங்களிலும் கண்காட்சிக்கான இணைப்பு கிடைக்கும்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு மண்டல பத்திரிகை தகவல் அலுவலகம்/மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றின் மூலமாக இணைப்பு கிடைக்க செய்யப்படும். முகநூல், டிவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளங்களிலும் இது பிரபலப்படுத்தப்படும்.

இந்த தலைப்பு தொடர்பானவற்றை #AmritMahotsav எனும் ஹேஷ்டாகை பயன்படுத்தி வாசகர்கள் பதிவிடலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749614

*****************



(Release ID: 1749666) Visitor Counter : 312