எரிசக்தி அமைச்சகம்
மத்திய மின்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங் மற்றும் பருவநிலைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் திரு ஜான் கெர்ரி இடையே தொலைபேசி பேச்சு
Posted On:
27 AUG 2021 1:16PM by PIB Chennai
மத்திய மின்துறை அமைச்சர் திரு.ஆர்.கே.சிங்குடன், பருவநிலைக்கான அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் திரு ஜான் கெர்ரி நேற்று தொலைபேசியில் பேசினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 145 ஜிகாவாட் அளவுக்கு சாதனை படைத்ததற்காக இந்தியாவை திரு ஜான் கெர்ரி பாராட்டினார். 63 ஜிகாவாட் அளவுக்கு கட்டுமானங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 25 ஜிகா வாட் அளவிலான திட்டங்கள் ஏலத்தில் உள்ளன. பசுமை ஹைட்ரஜன் பயன்பாட்டில், உலகின் முன்னணி நாடாக உருவாகும் இந்தியாவின் திட்டத்தை திரு ஜான் கெர்ரியிடம், மத்திய அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
உர உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் பசுமை ஹைட்ரஜன் பயன்படுத்துவதை கட்டாயமாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாவும் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.
சுற்றுச்சூழலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதரிடம் திரு சிங் கூறினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் சேமிப்பு செலவை குறைக்கும் தேவை குறித்து சுட்டிக் காட்டிய மத்திய அமைச்சர், மின்சாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் புத்தாக்கத்துக்கு இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படலாம் என ஆலோசனை கூறினார்.
சூரிய மற்றும் காற்று மின்சக்தி உற்பத்தியில் 100 ஜிகா வாட் கடந்து இந்தியா சாதனை படைத்ததையும் அமைச்சர் குறிப்பிட்டார். நீர் மின்சக்தி திறனையும் சேர்த்தால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் மொத்த திறன் 147 மெகா வாட் ஆகும்.
பேட்டரி மின்சக்தி சேமிப்புக்கு தேவையான லித்தியத்துக்கு மாற்று விநியோக முறையை ஏற்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் செயல்பட வேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.
எரிசக்தி துறையில் மேலும் விவாதிக்க, திரு ஆர்.கே.சிங் மற்றும் திரு கெர்ரி ஆகியோர் விரைவில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749508
*****************
(Release ID: 1749567)
Visitor Counter : 229