சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 61 கோடியை தாண்டியது

Posted On: 27 AUG 2021 10:00AM by PIB Chennai

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 61 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது. இன்று காலை 7 மணிக்கு கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 66,60,983 முகாம்களில் 61,22,08,542 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,18,21,428 பேர் கொவிட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்கடந்த 24 மணி நேரத்தில் 32,988 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.60சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 44,658 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து 61 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

 

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,44,899ஆக உள்ளது இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.06  சதவீதம் மட்டுமே ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 18,24,931 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 51,49,54,309 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.10 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.40 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 32 நாட்களாக அன்றாட தொற்று உறுதி விழுக்காடு 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 81 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1749453 


(Release ID: 1749521) Visitor Counter : 212