மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு, ஏஐசிடிஇ மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் இணைந்து நடத்தும் மாந்தன்-2021 ஹேக்கத்தான்
Posted On:
26 AUG 2021 4:04PM by PIB Chennai
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு நீரஜ் சின்ஹா மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் டி சகஸ்ரபுத்தே ஆகியோர் இணைந்து, மாந்தன்-2021 ஹேக்கத்தானை இன்று தொடங்கி வைத்தனர்.
கல்வி அமைச்சகத்தின் புதுமைகள் பிரிவு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுடன் இணைந்து காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் நடத்தும் மாந்தன்-2021, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் நமது உளவு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான புதுமையான சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகளை அடையாளம் காண்பதற்கான பிரத்தியேக தேசிய முன்னெடுப்பு ஆகும்.
2021 நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை முப்பத்தி ஆறு மணி நேரத்திற்கு நடக்கவிருக்கும் இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் பதிவு பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பங்குபெற்று, வலிமையான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க தொழில்நுட்பத் தீர்வுகளை தங்களது தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் புதுமையான திறமைகளைப் பயன்படுத்தி வழங்குவார்கள்.
வெற்றி பெறும் குழுக்களுக்கு மொத்தம் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள 6 பிரிவுகளின் கீழ் உள்ள 20 சவால்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ஆழ் கற்றல், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் இயந்திரக் கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி டிஜிட்டல் தீர்வுகளை போட்டியில் பங்கு பெறுவோர் உருவாக்க வேண்டும்.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், https://manthan.mic.gov.in எனும் இணைய முகவரியில் 2021 ஆகஸ்ட் 26 முதல் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749241
-----
(Release ID: 1749312)
Visitor Counter : 211