நித்தி ஆயோக்
இந்தியாவில் மகளிர் தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காக நிதி ஆயோக், சிஸ்கோ கைகோர்ப்பு
Posted On:
26 AUG 2021 1:55PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள மகளிர் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நிதி ஆயோக்கும், சிஸ்கோவும் மகளிர் தொழில்முனைவு தளத்தின் அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. டபிள்யூ ஈ பி நெக்ஸ்ட் (WEP Nxt) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தளம், சிஸ்கோவின் தொழில்நுட்பம் மற்றும் பணி அனுபவத்தால் நாடு முழுவதும் உள்ள பெண்களால் நடத்தப்படும் வர்த்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவிகரமாக இருக்கும்.
நிதி ஆயோக் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு அமிதாப் கண்ட், மூத்த ஆலோசகர் திருமிகு அன்னா ராய், சிஸ்கோவின் நிர்வாக துணைத் தலைவர் திருமிகு மரியா மார்டினே, சிஸ்கோ இந்தியாவின் தலைவர் திருமிகு டெய்சி சிட்டிலபில்லி, மேலாண் இயக்குநர் திரு ஹரி கிருஷ்ணன் ஆகியோரும் இந்தத் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
பலதரப்பட்ட பின்னணியிலிருந்து வரும் பெண்களை ஒன்றிணைத்து அவர்கள் ஏராளமான தளங்களை அணுகவும், ஆதரவைப் பெறுவதற்காகவும், கற்பதற்கான வாய்ப்புகளை அளிப்பதற்காகவும் கடந்த 2017- ஆம் ஆண்டு முதன்முறையாக டபிள்யு ஈ பி தளத்தை நிதி ஆயோக் அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சிகளை அதிகப்படுத்தும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக டபிள்யூ ஈ பி நெக்ஸ்ட் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய திரு அமிதாப் கண்ட், இதுபோன்ற முயற்சிகளில் இந்திய அரசும் தனியார் துறையினரும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான வாய்ப்பு உருவாகி, புதிய இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749197
---
(Release ID: 1749311)
Visitor Counter : 275