ஜல்சக்தி அமைச்சகம்

100 நாள் 'சுஜலாம்' பிரச்சாரம் ஆரம்பம்

Posted On: 25 AUG 2021 4:20PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக  100 நாள் 'சுஜலாம்' பிரச்சாரத்தை ஜல் சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. கழிவு நீர் மேலாண்மையை கிராம அளவில் மேற்கொண்டு, திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்களை அதிக அளவில் உருவாக்குவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம், நாடு முழுவதும் குறுகிய காலத்தில் திறந்த வெளி மலம் கழித்தல் இல்லாத கிராமங்கள் உருவாக்கப்படும். 2021 ஆகஸ்ட் 25 அன்று தொடங்கிய இந்த பிரச்சாரம் அடுத்த நூறு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.

10 லட்சம் குட்டைகளை அமைப்பது உள்படகிராமங்களில் கழிவு மற்றும் கழிவு நீர் மேலாண்மைக்கு தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல் நீர்நிலைகளின் நீடித்த மேலாண்மையையும் இந்த பிரச்சாரம் கருத்தில் கொள்ளும்நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது கிராமப் பகுதிகளிலும் கிராமங்களுக்கு வெளியேயும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் கழிவுநீர் மேலாண்மை மேம்படுத்தப்பட்டு, நீர்நிலைகள் புத்தாக்கம் பெறும்.

தற்போதைய நிலைமையை ஆய்வு செய்வதற்காக சமுதாய ஆலோசனைகள் மற்றும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும். திறந்தவெளியில் மலம் கழித்தலை ஒழிப்பது மற்றும் கழிவுநீர் குட்டைகளை அமைப்பது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதுதொடர்பான 100 நாள் திட்டம்

உருவாக்கப்படும். தேவையான அளவு கழிவுநீர் குட்டைகளும் கழிவறைகளும் கட்டப்பட்டு, கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளும் கழிவறைகளை பயன்படுத்துவது உறுதிசெய்யப்படும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748899

 

-----(Release ID: 1749036) Visitor Counter : 308