குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கடினமாக உழைக்கவும், லட்சியங்களை அடையவும், ஒலிம்பிக் வீரர்களிடம் இருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் அழைப்பு
Posted On:
25 AUG 2021 3:11PM by PIB Chennai
கடினமாக உழைக்கவும், லட்சியங்களை அடையவும், ஒலிம்பிக் வீரர்களிடம் இருந்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
சிவாஜி கல்லூரி வைர விழா கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒலிம்பிக் வீரர்கள் தங்கள் சாதனைகளால், நாட்டுக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை. பல விளையாட்டுகளில் அவர்கள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து இளம் வயதினர் உத்வேகம் பெற வேண்டும். தங்கள் இலக்குகளை அடைய இளம் வயதினர் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. அது எப்போதும் நேர்மறையான முடிவுகளை அளிக்கும். ஆகையால், முயற்சியை கைவிடாதீர். உங்கள் கனவுகளுக்காக போராடி, உலகிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவும்.
வகுப்பறைகளிலும், பொழுதுபோக்கு மைதானங்களிலும் மாணவர்கள் சமஅளவு நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். விளையாட்டில் பங்கேற்பது, தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும், குழு உணர்வை அதிகரித்து, உடல் தகுதியை மேம்படுத்தும்.
வாழ்க்கைமுறை நோய்களை எதிர்த்து போராட இது முக்கியம். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக விளையாட்டு இடம் பெற வேண்டும். விளையாட்டு மற்றும் இதர உடலளவிலான நடவடிக்கையில் ஈடுபட மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பல தொழில்நுட்ப துறைகளில், இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற அதிக ஆற்றல் உள்ளன. திறமையான இளம்வயதினரும் அதிகம் உள்ளனர். புத்தகங்களை தாண்டி, பரிசோதனை முறையிலான கற்றலை நாம் ஆராய வேண்டும்.
இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748865
-----
(Release ID: 1748987)
Visitor Counter : 204