பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-கஜகஸ்தான் கூட்டுப்பயிற்சி 2021 ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவிருக்கிறது

प्रविष्टि तिथि: 25 AUG 2021 10:16AM by PIB Chennai

ராணுவ ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் கஜகஸ்தானுடனான வளர்ந்து வரும் உறவை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'கஜிந்த்-21' என்றழைக்கப்படும் இந்தியா-கஜகஸ்தான் கூட்டுப்பயிற்சியின் ஐந்தாவது பதிப்பு, 2021 ஆகஸ்ட் 30 அன்று தொடங்கவிருக்கிறது.

கஜகஸ்தானில் உள்ள ஆயிஷா பிபியில் இருக்கும் பயிற்சி நிலையத்தில் 2021 செப்டம்பர் 11 வரை நடக்கவிருக்கும் இந்த கூட்டு பயிற்சியில், இந்தியா-கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் விதத்தில் இரு நாட்டு ராணுவங்களும் பயிற்சிகளை மேற்கொள்ளும்.

இந்திய ராணுவத்தில் இருந்து பீகார் படைப்பிரிவை சேர்ந்த 90 பேர் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர். கஜகஸ்தான் ராணுவத்தை சேர்ந்த ஒரு கம்பெனி வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

 தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து இந்தியா மற்றும் கஜகஸ்தான் ராணுவத்தினருக்கு இந்த கூட்டு நடவடிக்கையின்போது போது பயிற்சி அளிக்கப்படும். பணி ரீதியான விஷயங்களை பகிர்ந்து கொள்ளுதல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல், ஆயுதங்கள் பயன்படுத்தல் திறமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.

இந்தியா மற்றும் கஜகஸ்தான் ராணுவங்களுக்கு இடையே நிலவி வரும் பரஸ்பர நம்பிக்கை, கூட்டு செயல்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்தல் ஆகியவற்றை இந்த பயிற்சி வலுப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748756

 

----


(रिलीज़ आईडी: 1748977) आगंतुक पटल : 325
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Malayalam