நித்தி ஆயோக்

வடகிழக்கு மாகாணங்களின் மாவட்ட அளவிலான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21, ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியீடு

Posted On: 24 AUG 2021 1:21PM by PIB Chennai

வடகிழக்கு மாகாணங்களின் மாவட்ட அளவிலான நிலையான வளர்ச்சி இலக்குகள், குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21 இன் முதல் பதிப்பை ஆகஸ்ட் 26-ஆம் தேதி நிதிஆயோக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கான அமைச்சகம் வெளியிடும். அருணாச்சலப்பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களில் உள்ள 120 மாவட்டங்களில் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க முயற்சியாக முதல்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த வெளியீடு அமையும்.

நிதிஆயோக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு அமிதாப் கண்ட், வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர். இந்தர்ஜித் சிங், இந்தியாவின் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் உள்நாட்டுப் பிரதிநிதி திருமிகு. நாதியா ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நிதிஆயோக் துணைத்தலைவர் டாக்டர். ராஜீவ் குமார், மத்திய வடகிழக்கு மாகாண வளர்ச்சி, சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி, வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான இணை அமைச்சர் திரு. பி. எல்.. வர்மா ஆகியோர் இந்தக் குறியீடு மற்றும் தகவல் பலகையை வெளியிடுவார்கள்.

நிதிஆயோக் மற்றும் வடகிழக்கு மாகாண வளர்ச்சிக்கான அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் தயாரிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாகாணங்களின் மாவட்ட அளவிலான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகைக்கு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டம் தொழில்நுட்ப ஆதரவை அளிக்கிறது. நாட்டில் நிலையான வளர்ச்சி இலக்குகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் முக்கிய சாதனமான நிதிஆயோக்கின் இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டின் அடிப்படையில் இந்தக் குறியீடு அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748497

-----

 



(Release ID: 1748605) Visitor Counter : 254