புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தைக் கொண்டாடுகிறது, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்: இந்தியாவின் பல நகரங்களில் சூரியமின்சக்திமயமாக்கம் குறித்த இணையக்கருத்தரங்கு

Posted On: 24 AUG 2021 1:51PM by PIB Chennai

இந்திய நகரங்களில் சூரியமின்சக்திமயமாக்கம் குறித்த இணையக் கருத்தரங்கை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உலக வங்கியின் ஆதரவுடன் நடத்தியது. மேலும், ஆன்லைன் பயிற்சிகள், டிஸ்காம் நிறுவன அதிகாரிகள் மற்றும் சூரிய மின்சக்தி தூதுவர்களின் பிரச்சாரங்கள் நேற்று நடத்தப்பட்டனஇந்திய விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தைக் கொண்டாட, 2021 ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையிலான வாரத்தில் பல நிகழ்ச்சிகளை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் நடத்துகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும், குறைந்தது ஒரு நகரத்தில், அனைத்து மின் தேவைகளையும் சூரிய மின்சக்தி அல்லது இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்குறைந்த மின் கட்டணம், குறைந்த மாசு, குறைந்த கார்பன் வெளியேற்றம் மூலம் சூரிய மின்சக்தி நகரங்கள் அதிகம் பயன் பெறும்.

இந்த இணையக் கருத்தரங்கில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு அமிதேஷ் சின்ஹா கூறுகையில், சூரிய மின்சக்தி நகரங்களாக உருவாகக் கூடிய நகரங்களை 22 மாநிலங்களும் / யூனியன் பிரதேசங்களும் அடையாளம் கண்டுள்ளனஇங்கு சூரிய மின்சக்தித் தகடுகளை கூரை மேல் அமைப்பது, கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் ஆலைகளை நிறுவுவது, காற்று, நீர் மின்சக்தி நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்வது, சூரிய மின்சக்தித் தெரு விளக்குகள், சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் கோபுரங்கள் அமைப்பது போன்றவை இலக்காக இருக்கும் என அவர் தெரிவித்தார்நகரங்களை சூரியமின்சக்தி மயமாக்கும் முக்கிய அம்சங்கள் மற்றும் அணுகுமுறைகள் குறித்து உலக வங்கி பிரதிநிதி விரிவான விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூரிய மின்சக்தித் தகடுகளை தங்கள் வீட்டுக் கூரைகளில் பொருத்தியவர்கள், தங்கள் அனுபவங்களையும், பயன்களையும் பகிர்ந்து கொண்டனர். சூரிய மின்சக்தி நகரம் அமலாக்கம் பற்றிய நிபுணர் குழு ஆலோசனையும் நடந்தது. இதில், பீகார், ஒடிசா, மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று சூரிய மின்சக்தி நகரை உருவாக்கும் திட்டங்களின் முக்கிய விவரங்கள், சாதனைகள், சூரிய மின்சக்தி நகர திட்ட அமலாக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748506

 

*****(Release ID: 1748586) Visitor Counter : 146