மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய கல்விக்கொள்கை 2020-ன் முக்கிய முயற்சிகள் மற்றும் ஓராண்டு சாதனைகளை விளக்கும் கையேடு : அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நாளை வெளியிடுகிறார்

Posted On: 23 AUG 2021 4:39PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ஓராண்டு அமலாக்கத்தை கொண்டாடுவதற்காக, அதன் ஓராண்டு சாதனைகளை விளக்கும் கையேட்டை, கல்வித்துறை அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை உருவாக்கியுள்ளது. இந்த கையேட்டை மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், திக்ஷா இணையதளத்தில் காணொலி காட்சி மூலம் நாளை (ஆகஸ்ட் 24ம் தேதி) வெளியிடுகிறார். 

கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தேசிய கவுன்சில் (என்சிஇஆர்டி), மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத்துறையுடன் இணைந்து தயாரித்த ப்ரியாஎன்ற கையேட்டையும் மத்திய கல்வி அமைச்சர், சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமாருடன் இணைந்து வெளியிடுகிறார்.  இது, அனைத்தும் உள்ளடங்கிய கல்வியை நோக்கிய நடவடிக்கையாக, குழந்தைகளின் உரிமையில்  ஆரம்ப காலத்திலிருந்தே, கருத்து மற்றும் அணுகலின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கிறது. 

இந்நிகழ்ச்சியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இதைத் தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் செயலாளர்களுடன் குழந்தைகளுக்கான கல்வி குறித்த நிபுன் பாரத் திட்டம்’-ஐ முன்னெடுத்து செல்வதற்கான  பயிலரங்கு நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748270

*****************



(Release ID: 1748309) Visitor Counter : 160