புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் சார்பாக விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்

प्रविष्टि तिथि: 23 AUG 2021 1:40PM by PIB Chennai

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தைக் கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 23 முதல் 27 வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

பிரதமரின் குசம் திட்டம் குறித்த தகவல்களை விவசாயிகளிடமும், கூரைகள் மீது நிறுவப்படும் சூரிய சக்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நுகர்வோரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த ஒரு வார காலத்தில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இரு திட்டங்களும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

பயிற்சி, வலைதள கருத்தரங்கங்கள், குழு விவாதங்கள், திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடல் போன்ற இணையவழி நிகழ்ச்சிகளுடன்  கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடியாகவும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

கூரைகள் மீது பொருத்தப்படும் சூரிய சக்தி சாதனங்களின் பயன்கள் குறித்தும், அவற்றை நிறுவுவது பற்றியும், நுகர்வோருடன் நிபுணர்கள் கலந்துரையாடுவார்கள். இந்த வகையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நிறுவுவதால் ஏற்படும் மின்சார சேமிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்கள் எடுத்துரைப்பார்கள்.

தலைசிறந்த ஆளுமைகள் மற்றும் திட்டத்தின் பயனாளிகளின் காணொளி செய்திகளும் இடம்பெறும். கட்டிடங்களின் கூரைகளில் பொருத்தப்படும் சூரிய சக்தி சாதனங்களை பயன்படுத்தும் நுகர்வோர் மற்றும் அதனால் பயனடைவோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இதுபோன்ற தகவல்கள் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்படும்.

சூரியசக்தி நகரங்களாக வளர்ச்சி பெறுவதற்கு இதுவரை 20 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள், நகரங்களைக் கண்டறிந்துள்ளன. இவை தவிர கோனார்க் மற்றும் மோதேரா (சூரிய ஆலயம் அமைந்துள்ள நகரங்கள்) ஆகியவை சூரிய சக்தி நகரங்களாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1748207

*****************


(रिलीज़ आईडी: 1748264) आगंतुक पटल : 368
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Telugu