நித்தி ஆயோக்

தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளை மத்திய நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் நாளை தொடங்கி வைக்கிறார்

Posted On: 22 AUG 2021 12:11PM by PIB Chennai

தேசிய பணமாக்கல்  ஆதார வழிமுறைகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் நாளை தொடங்கி வைக்கிறார்.

தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளில் (The National Monetisation Pipeline (NMP), மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களின், நான்கு ஆண்டு ஆதார வழிமுறைகள் அடங்கியுள்ளன.   இது முதலீட்டாளர்களுக்கு தொலைநோக்கை அளிப்பதோடுசொத்துக்களை பணமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு, இடைக்கால திட்டமாகவும் செயல்படும். 

உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு புதுமையான மற்றும் மாற்று முறையில் நிதி திரட்ட, சொத்துக்களை பணமாக்குவது பற்றி மத்திய அரசின் 2021-22ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை வலியுறுத்துகிறது.

நிதிஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப்காந்த் ஆகியோரும்பணமாக்கல் ஆதாரமாக உருவாகவுள்ள சொத்துக்கள்  அடங்கிய  அரசு துறைகளின்  செயலாளர்கள் முன்னிலையிலும் தேசிய பணமாக்கல் ஆதார புத்தகம் வெளியிடப்படும். 

*****************

 



(Release ID: 1748032) Visitor Counter : 381