குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவரின் ஓணம் வாழ்த்து செய்தி

प्रविष्टि तिथि: 20 AUG 2021 8:03PM by PIB Chennai

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஓணம் நன்னாளில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் கேரள சகோதர சகோதரிகளுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அறுவடையை கொண்டாடும் இந்த பண்டிகை, விவசாயியின் கடின உழைப்பை எடுத்துரைப்பதோடு, இயற்கை அன்னைக்கும் நன்றி செலுத்துகிறது. நல்லிணக்கம், அன்பு ஆகியவற்றை சமுதாயத்தில் இப்பண்டிகை விதைக்கிறது.

இந்த நன்னாளில், நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்தை நோக்கி ஒன்றிணைந்து முன்னேறி செல்ல நாமனைவரும் உறுதியேற்போம்,” என்று தமது வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

*****************

 


(रिलीज़ आईडी: 1747701) आगंतुक पटल : 278
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi