நிலக்கரி அமைச்சகம்
மரக்கன்றுகள் நடுவதை விட இயற்கைக்கும், மனிதர்களுக்கும் ஆற்றும் பெரிய சேவை ஏதும் இருக்க முடியாது :திரு பிரகலாத் ஜோஷி
Posted On:
19 AUG 2021 6:15PM by PIB Chennai
முடிந்த வரை பல மரக்கன்றுகள் நடுவதை விட இயற்கைக்கும், மனிதர்களுக்கும் ஆற்றும் பெரிய சேவை வேறு ஏதும் இருக்க முடியாது என மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.
தேசிய அளவிலான மரம் நடும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
இன்றைய மரம் நடும் செயலின், பலனை பல தலைமுறைகள் அறுவடை செய்யும். மரம் நடும் திட்டம், அனைத்து தரப்பினர் இடையே, தங்கள் பகுதியில் மரம் நடுதல் பற்றியும், நிலப் பகுதியை அழகுபடுத்துவது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும்.
ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரக்கன்றாவது நட வேண்டும். சிறு மரக் கன்று, நம் கண் முன் வளர்வதை பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அது பதிலுக்கு பல மனித உயிர்களை காக்கிறது. முடிந்த வரை பல மரக்கன்றுகள் நடுவதை விட இயற்கைக்கும், மனிதர்களுக்கும் ஆற்றும் பெரிய சேவை வேறு ஏதும் இருக்க முடியாது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி பேசினார்.
இந்நிகழ்ச்சியின் போது, 250க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த மரம் நடும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் இணைக்கப்பட்டது. மொத்தம் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. 3.2 லட்சம் மரக்கன்றுகள், உள்ளூர் மக்களுக்கும், அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டன. இதன் மூலம் மரம் நடுவதன் முக்கியத்துவம் மக்களுக்கு உணர்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இரண்டு சுற்றுச்சூழல் பூங்காக்களும் தொடங்கி வைக்கப்பட்டன. மத்தியப் பிரதேசம் சிங்ராலியில், வடக்கு நிலக்கரி சுரங்கத்தில் முத்வானி அணை சுற்றுச்சூழல் பூங்கா தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள நெய்வேலி 2வது நிலக்கரி சுரங்கத்திலும் சுற்றுச்சூழல் பூங்கா திறக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் உள்ள கிழக்கு நிலக்கரி சுரங்கத்திலும், ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்திலும் இரு சுற்றுச்சூழல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1747398
*****************
(Release ID: 1747481)
Visitor Counter : 253