பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய விமானப்படைக்காக அதிநவீன ‘சாஃப்’ தொழில்நுட்ப கருவி : டிஆர்டிஓ உருவாக்கியது

Posted On: 19 AUG 2021 11:46AM by PIB Chennai

ரேடார் மூலம் செயல்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளில் இருந்து இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பாதுகாக்க  அதிநவீன சாஃப்’  தொழில்நுட்பத்தை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது. போர் விமானங்களில் பொருத்தப்படும் இந்த சாதனத்தில், சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார் துகள்கள் மில்லியன் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும்.  தீப்பிழம்புடன் இது போர் விமானங்களில் இருந்து வெளியேறி காற்றில் பறக்கும்போது, லேசர் மூலம் செயல்படும் எதிரிநாட்டு ஏவுகணைகளை திசை திருப்பும். இதன் மூலம் தாக்குதலில் இருந்து போர் விமானங்கள் தப்பிக்க முடியும்.

ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓ ஆய்வகம், புனேவில் உள்ள டிஆர்டிஓ-வின் ஹை எனர்ஜி மெட்டீரியல்ஸ் ஆய்வகத்துடன்  (HEMRL), இணைந்து இந்த சாஃப்கேட்ரிட்ஜ் - 118/I’ சாதனத்தை உருவாக்கியுள்ளது.   வெற்றிகரமான பரிசோதனைகளுக்குப்பின், இந்த சாஃப்தொழில்நுட்பத்தை, விமானப்படையில்சேர்க்கும் நடவடிக்கையை இந்திய விமானப்படை தொடங்கியுள்ளது. 

இன்றைய மின்னணு போர் முறையில், நவீன ரேடார் கருவிகளின் அச்சுறுத்தல்களில் இருந்துபோர் விமானங்கள் தப்பிப்பது மிக முக்கியமான விஷயம்.  போர் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தடுப்பு நடவடிக்கை கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இவைகள் அகச்சிவப்பு  கதிர்கள் மற்றும் ரேடார் அச்சுறுத்தல்களை முடக்கும். 

இந்த முக்கியமான தொழில்நுட்பத்தை  உள்நாட்டில் உருவாக்கியதற்காக, டிஆர்டிஓ, விமானப்படை மற்றும் இதன் தயாரிப்பில் ஈடுபட்ட தொழில்துறையினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். பாதுகாப்பு தொழில்நுட்ப யுக்தியில், தற்சார்பு இந்தியா நடவடிக்கையில், டிஆர்டிஓ மேலும் ஒரு படி முன்னேறியுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 

சாஃப்தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்கிய குழுவினரை டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டினார்.

*****************



(Release ID: 1747359) Visitor Counter : 355