மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பேரிடர் மேலாண்மை, மீட்பு மற்றும் பாதிப்பு குறைப்பு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, வங்கதேசம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 18 AUG 2021 4:18PM by PIB Chennai

பேரிடர் மேலாண்மை, மீட்பு மற்றும் பாதிப்பு குறைப்பு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா, வங்கதேசம் இடையே கடந்த மார்ச் மாதம் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், வங்கதேசத்தின் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சகம் இடையே செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் குறித்து, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சகத்திடம் விளக்கப்பட்டது. இதையடுத்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

பயன்கள்:

இந்த ஒப்பந்தத்தால், இரு தரப்பு பேரிடர் மேலாண்மை முறைகளால்இரு நாடுகளும் பயன் அடையும். பேரிடர் மேலாண்மை துறையில் தயார்நிலை, நடவடிக்கை, திறன் மேம்பாடு ஆகியவற்றை வலுப்படுத்த உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746953

 

-----


(रिलीज़ आईडी: 1747064) आगंतुक पटल : 312
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam