பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மண்டல வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்திற்கு புத்தாக்கம் அளிக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 AUG 2021 4:10PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய பொதுத் துறை நிறுவனமான வடகிழக்கு மண்டல வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்திற்கு புத்தாக்கம் அளிப்பதற்காக ரூ 77.45 கோடிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கண்ட தொகையில் ரூ 17 கோடி நிதி சார்ந்த ஆதரவுக்கும், ரூ 60.45 கோடி நிதி சாராத ஆதரவுக்கும் ஆகும். இந்த நிவாரண தொகுப்பு செயல்படுத்தப்படுவதன் மூலம், வடகிழக்கு பகுதியில் உள்ள விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும்.

மேலும், சிறப்பான வேளாண் வசதிகள், விவசாயிகளுக்கு பயிற்சி, இயற்கை விதைகள் மற்றும் உரம், அறுவடைக்கு பிந்தைய வசதிகள் உள்ளிட்டவற்றை வடகிழக்கு மண்டல வேளாண் சந்தைப்படுத்துதல் நிறுவனத்தால் இதன் மூலம் உருவாக்க முடியும்.

இதைத் தவிர, நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல், பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுதல் ஆகியவற்றின் மூலம் வடகிழக்கு விவசாயிகளின் விளைபொருட்களை சர்வதேச சந்தைகளில் ஊக்கப்படுத்த முடியும். நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து, செலவுகளும் குறையும். நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும். சுமார் 33,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746944

                                                                                                                                    ------

 


(Release ID: 1746999) Visitor Counter : 266