குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

4 நாடுகளின் தூதர்கள், தங்களின் நியமன சான்றுகளை, காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்

Posted On: 18 AUG 2021 3:45PM by PIB Chennai

ஹோலி சீ, நைஜீரியா, ஆஸ்திரியா, தென்கொரியா தூதர்களின் நியமன சான்றுகளை, காணொலி காட்சி மூலம் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று ஏற்றுக் கொண்டார்நியமன சான்றுகளை அளித்தவர்களின் விவரம்

1. மேதகு பங்குத்தந்தை லியோபோல்டோ ஜிரேலி, அப்போஸ்தலிக் ஹோலி சீ.

2. மேதகு திரு அகமது சுலே, நைஜீரிய தூதர்.

3. மேதகு திருமதி கதாரினா வீசர், ஆஸ்திரியா தூதர்.

4. மேதகு திரு சாங் ஜே-போக், தென்கொரியா தூதர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், தூதர்களின் நியமனத்துக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நான்கு நாடுகளுடன், இந்தியா நெருங்கிய உறவை கொண்டுள்ளது என்றும், அமைதி மற்றும் செழிப்புக்கு  பொதுவான தொலைநோக்கை பகிர்ந்து கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மற்றும் பலதரப்பட்ட அமைப்புகளில், இந்தியாவின் செயல்பாடு பரஸ்பர பயனுள்ள கூட்டுறவை ஏற்படுத்தியுள்ளது என குடியரசுத் தலைவர் மேலும் தெரிவித்தார். வளரும் நாடுகள், குறைவான பிரதிநிதித்துவம் உள்ள நாடுகளின் நலனை மனதில் வைத்து, நியாயமான மற்றும் சமஅளவிலான உலகளாவிய ஒழுங்கை ஏற்படுத்துவதில் இந்தியா உறுதியுடன் இருக்கிறது என அவர் கூறினார்

வெளிநாட்டு தூதர்கள், தங்கள் நாடுகளின் தலைவர்கள் சார்பில், குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் மற்றும் இந்தியாவுடன் நெருங்கிய உறவை வலுப்படுத்துவதில் உறுதியுடன் இருப்பதாகவும் அவர்கள் வலியுறுத்தி னார்கள்

                                                                                             ----


(Release ID: 1746970) Visitor Counter : 237