சுரங்கங்கள் அமைச்சகம்
தனியார் ஆராய்ச்சி முகமைகள், கனிமவளப் பணிகளில் ஈடுபடுவதற்கான அங்கீகாரத்தை வழங்கும் திட்டம்
Posted On:
18 AUG 2021 2:04PM by PIB Chennai
இந்திய தர கவுன்சிலின் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய அங்கீகார வாரியத்தால் உருவாக்கப்பட்ட தனியார் ஆராய்ச்சி முகமைகளின் அங்கீகாரத்திற்கான திட்டத்தை சுரங்கங்கள் அமைச்சகம் பின்பற்றியுள்ளது.
இந்தத் திட்டத்தின் நெறிமுறைகளுக்கு இணங்க, தனியார் ஆராய்ச்சி முகமைகள் கனிமவள துறையில் செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு இந்திய தர கவுன்சில்- கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய அங்கீகார வாரியம், அதிகாரப்பூர்வ ஒப்புதலை அளிக்கும். விருப்பமுள்ள தனியார் ஆராய்ச்சி முகமைகள், திட்டத்திற்கு இணங்க அங்கீகாரம் பெற வேண்டும். அதன் பிறகு அமைச்சகத்தின் அறிவிப்பிற்காக விண்ணப்பிக்க வேண்டும். ஆராய்ச்சி முகமைகளுக்கான அறிவிப்பை வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்காக விரிவான நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய வழிமுறைகளை அமைச்சகம் வகுத்துள்ளது.
இந்தத் திட்டம், புதிய தொழில்முனைவோருக்கு ஊக்கமளிப்பதுடன், ஆராய்ச்சியின் வேகத்தை அதிகரித்து, புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
https://www.mines.gov.in/writereaddata/UploadFile/orderdated12aug2021enclosures.pdf என்ற சுரங்கங்கள் அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்தில் தனியார் ஆராய்ச்சி முகமைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் மற்றும் வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1746921
*****
(Release ID: 1746921)
(Release ID: 1746928)
Visitor Counter : 321