பாதுகாப்பு அமைச்சகம்

விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவம்: எல்லை சாலைகள் அமைப்பின் சார்பாக மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

Posted On: 14 AUG 2021 1:02PM by PIB Chennai

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தைக் குறிக்கும் விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவத்தின் ஒரு பகுதியாக எல்லை மாநிலங்கள் மற்றும் நட்பு நாடுகளில் 75 மருத்துவ முகாம்களை எல்லை சாலைகள் அமைப்பு நடத்துகிறது. ஜம்மு காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், லடாக், உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், திரிபுரா மற்றும் பூட்டானில் அதிகமான முகாம்கள் நடைபெறுகிறது.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, எல்லைப் பகுதிகள் மற்றும் தொலைதூர இடங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மருந்துகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கொவிட்-19 பெருந்தொற்று குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. சுகாதாரம், சமூக இடைவெளி, முகக் கவசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்படுவதுடன், முகக் கவசங்களும் கை சுத்திகரிப்பான்களும் இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745721

*****************



(Release ID: 1745785) Visitor Counter : 239