தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பிரச்சார் பாரதியின் நேரடி ஒளிபரப்புடன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்

Posted On: 13 AUG 2021 5:32PM by PIB Chennai

இந்தாண்டு, 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுவதால், விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை குறிக்கும் வகையில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை செங்கோட்டையிலிருந்து மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரையை நேரடியாக ஒளிபரப்பும். 

தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் சுதந்திர தின கொண்டாட்ட ஒளிபரப்புகள், சுதந்திர தினத்துக்கு முதல் நாள், ஆகஸ்ட் 14ம் தேதி மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந் நாட்டு மக்களுக்கு விடுக்கும் தகவலுடன்  தொடங்கும்.

இந்த ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திரதின கொண்டாட்டங்களில் தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பில் 40-க்கும் மேற்பட்ட  கேமிராக்கள், செங்கோட்டையில், பிரதமர் திரு நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றும் வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை பிரம்மாண்டமாக படம்பிடித்து காட்டும்.

அகில இந்திய வானொலியின் தேசிய சேனல்கள், ஒட்டு மொத்த கொண்டாட்டங்களையும்  ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனைகளுடன் நேரடியாக ஒலிபரப்பும்.  அகில இந்திய வானொலி, பல தேசபக்தி மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நாள் முழுவதும் ஒலிபரப்பும்.

தூர்தர்ஷன் சேனல்களில், எச்.டி தரத்தில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களை ஒளிபரப்புவதோடு, டி.டி நேஷனல் யூ டியூப் சேனல்களும் முழு ஒளிபரப்பையும் உங்கள் ஸ்மார்ட் போனுக்கு பிரம்மாண்டமாக கொண்டுவரும்.

முழுமையான ஒளிபரப்பை உறுதி செய்ய, குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் தகவல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை மற்றும் சுதந்திர தினத்தின் முழு கொண்டாட்டங்கள் பல மாநில மொழிகள் மற்றும் சைகை மொழிகளில், ஒளிபரப்ப பிரச்சார் பாரதி ஏற்பாடு செய்துள்ளது.

டிடி நேஷனல் யூ டியூப் சேனலில் மேலே குறிப்பிட்ட பல நேரடி நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழ்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

https://www.youtube.com/playlist?list=PLUiMfS6qzIMxGJdFoUqwuo7C8UBF6w1F7

*****************


(Release ID: 1745576)