சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மாற்றுத்திறனாளிகள் சியாச்சின் பனிமலையில் புதிய உலக சாதனை படைக்கும் ‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்’ என்ற பயணத்தை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.
प्रविष्टि तिथि:
13 AUG 2021 1:43PM by PIB Chennai
நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், புதிய உலக சாதனை படைப்பதற்காக உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிமலைப் பகுதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். சமீபத்தில், மாற்றுத்திறனாளிகள் குழுவினர் சியாச்சின் பனிமலைக்கு செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. பனிமலைப் பகுதிக்கு செல்லும் விதத்தில், மாற்றுத்திறனாளிகள் குழுவுக்கு, ‘ டீம் க்ளாவ்’ என்ற ராணுவ முன்னாள் வீரர்கள் குழு பயிற்சி அளித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், சியாச்சின் மலைப் பகுதியின் ‘குமார் போஸ்ட்’ என்ற இடம் வரை பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அதிக அளவிலான, மாற்றுத்திறனாளிகள் குழு, உலகின் மிகப் பெரிய போர்க்களத்துக்கு செல்வது புதிய உலக சாதனையாக இருக்கும்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மாற்றுத்திறனாளிகள் சியாச்சின் பனிமலைக்கு செல்லும் வாகனங்களை, புதுதில்லி ஜன்பத் சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்திலிருந்து கொடிசைத்து தொடங்கி வைப்பார்.
‘ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்’ என்ற இந்த முன்னணி பயணத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதில் இந்தியாவை உலக அரங்கில் முன்வைக்கும். இதை மற்ற நாடுகள் பின்பற்றவும் ஒரு உதாரணத்தை ஏற்படுத்தும். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதமர் தொலைநோக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி திறனை வழிநடத்தும் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் நாட்டம் ஆகியவற்றை இது செயல்படுத்தும். அதேநேரத்தில், இந்திய பாதுகாப்பு படைகளின், போர்களத்துக்கு வெளியேயான திறனையும், சக்திவாய்ந்த முறையில் இது வெளிப்படுத்தும்.
*****************
(रिलीज़ आईडी: 1745443)
आगंतुक पटल : 412