இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-ஐ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் சென்னை உட்பட நாடு முழுவதும் ஆகஸ்ட் 13 அன்று தொடங்கி வைக்கிறார்

Posted On: 12 AUG 2021 6:10PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக, ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் புதுதில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் விளையாட்டு அரங்கில் 2021 ஆகஸ்ட் 13 அன்று தொடங்கி வைக்கிறார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் திரு நிசித் பிரமானிக் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தில்லியை தவிர, நாடு முழுவதுமுள்ள ஒன்பது இதர முக்கிய இடங்களில் சுதந்திர ஓட்டம் நடத்தப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத்தில் உள்ள சந்திரசேகர் ஆசாத் பூங்கா; அந்தமான் சிறை; ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காசா போஸ்ட்; மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவுவாயில், அசாமில் உள்ள சித்ரலேகா உத்யான் (கோல் பூங்கா); அத்தாரை எல்லை; ஜான்சி ரயில் நிலையம்; லேஹ்; மற்றும் சென்னையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப்படை, தேசிய பாதுகாப்புப் படை, எஸ்எஸ்பி, எல்லையோர பாதுகாப்புப் படை, ரயில்வே மற்றும் நேரு யுவ கேந்திர சங்கம் உள்ளிட்டவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன. இவற்றில் கலந்து கொள்பவர்களோடு காணொலி மூலம் திரு அனுராக் தாகூர் உரையாடுகிறார்.

ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 குறித்து காணொலி மூலம் தாம் விடுத்துள்ள செய்தியில் திரு தாகூர் கூறியிருப்பதாவது: “நாடு சுதந்திரமடைந்த 75-வது வருடத்தில், ஆரோக்கியமான இந்தியாவை கட்டமைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். ஆரோக்கியமான இந்தியா மட்டுமே வலிமையான, தற்சார்பு மிக்க புதிய இந்தியாவாக இருக்க முடியும்.” ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0- மக்கள் இயக்கமாக மாற்ற அனைவருக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

2021 அக்டோபர் 2 வரை ஒவ்வொரு வாரமும் 75 மாவட்டங்களில் உள்ள 75 கிராமங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும், 744 மாவட்டங்களில் உள்ள தலா 75 கிராமங்களிலும், நாடு முழுவதுமுள்ள 30,000 கல்வி நிறுவனங்களிலும் ஃபிட் இந்தியா சுதந்திர ஓட்டங்கள் நடைபெறும். 7.50 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் இதில் பங்கேற்கவுள்ளார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745207

-----


(Release ID: 1745266) Visitor Counter : 356