எரிசக்தி அமைச்சகம்

மத்திய அரசு அலுவலகங்கள், முன்கூட்டியே பணம் செலுத்தும் சீர்மிகு மின்சார கணக்கீட்டு கருவிகளுக்கு மாற எரிசக்தி அமைச்சகம் வலியுறுத்தல்

Posted On: 12 AUG 2021 4:01PM by PIB Chennai

மத்திய அமைச்சகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நேரடி நிறுவனங்களும் முன்கூட்டியே பணம் செலுத்தும் சீர்மிகு மின்சார கணக்கீட்டு கருவிகளுக்கு மாற முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் எரிசக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து அரசுத் துறைகளிலும் இந்த புதிய முறை பின்பற்றப்படுவதன் மூலம் முறையான எரிசக்தியின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுவதுடன், தனியார் மின் விநியோக நிறுவனங்கள், நிதி நிலைத் தன்மையின் பாதையில் மீண்டும் செல்வதை உறுதிப்படுத்த முடியும். மேலும், இதுபோன்ற முன்கூட்டியே பணம் செலுத்தும் அமைப்பு முறைகளுக்கு இது ஓர் முன்னுதாரணமாகத் திகழும்.

மின் விநியோகத் துறையின் செயல்பாட்டு செயல் திறன் மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக சீர்திருத்தங்களின் அடிப்படையில் பயன்சார்ந்த புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது இயங்கி வரும் தனியார் மின் விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டு செயல் திறனையும், நிதி நிலைத் தன்மையையும் மேம்படுத்த இந்தத் திட்டம் முடிவு செய்துள்ளது. இதன் மிக முக்கிய இடையீடாக, வேளாண் நுகர்வோர் தவிர அனைத்து மின்சார நுகர்வோருக்கும் சீர்மிகு மின்சார கணக்கீட்டு கருவியை பல்வேறு கட்டங்களில் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745149

 

----



(Release ID: 1745247) Visitor Counter : 199