நித்தி ஆயோக்
இந்தியாவில் மின்சார வாகன உள்கட்டமைப்புக்கு வழிகாட்டுவதற்கான கையேட்டை நிதி ஆயோக் வெளியிட்டது
प्रविष्टि तिथि:
12 AUG 2021 3:13PM by PIB Chennai
மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உள்கட்டமைப்பை நிறுவுவதற்கான கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை வகுப்பதில் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுவதற்கான கையேடு ஒன்றை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. மின்னேற்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தி மின்சார போக்குவரத்திற்கு நாடு வேகமாக மாறுவதற்கு உதவுவதே இந்த கையேட்டின் நோக்கமாகும்.
நிதி ஆயோக், மின்சார அமைச்சகம், மின்சார சிக்கனத்திற்கான அலுவலகம் மற்றும் வேர்ல்ட் ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் இந்தியா ஆகியவை இணைந்து இக்கையேட்டை உருவாக்கியுள்ளன. மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உள்கட்டமைப்பை திட்டமிடுதல், ஒப்புதல் அளித்தல் மற்றும் உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுக்கு முறையான மற்றும் முழுமையான வழிகாட்டுதல்களை இந்த கையேடு வழங்குகிறது.
இத்துறையின் வளர்ந்து வரும் தன்மையை கருத்தில் கொண்டு, மின்னேற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சியின் இன்றைய தேவைகள் மீது இது கவனம் செலுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் சர்வதேச யுத்தியாக மின்சார போக்குவரத்திற்கு மாறுவது விளங்குகிறது.
“மின்சார வாகனங்களுக்கான மின்னேற்ற உள்கட்டமைப்பை உருவாக்குவதில் உள்ளாட்சி அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொது சவால்களை சமாளிக்க இக்கையேடு உதவுகிறது. மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையேயான சிறந்த செயல்முறைகளை பகிர்ந்து கொள்வதற்கான ஆரம்ப புள்ளியாக இது இருக்கும்,” என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜிவ் குமார் கூறினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் மற்றும் கனரக வாகனத் துறை ஆகியவற்றின் ஆதரவை இந்த கையேடு பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1745127
------
(रिलीज़ आईडी: 1745205)
आगंतुक पटल : 372