உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

விமான போக்குவரத்துத் துறையில் இயக்கக் கட்டணத்தை எதிர்கொள்ள அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள்: மத்திய இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங் தகவல்

Posted On: 11 AUG 2021 11:57AM by PIB Chennai

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் வி கே சிங் மாநிலங்களவையில் இன்று எழுத்து மூலம் அளித்த பதில்கள் பின்வருமாறு:

சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் இயக்கக் கட்டணத்தை எதிர்கொள்வதற்காக அரசு மேற்கொண்டு வரும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒரு சில பின்வருமாறு:

•        பல்வேறு கொள்கை நடவடிக்கைகளின் மூலம் விமான நிறுவனங்களுக்கு ஆதரவு.

•        இந்திய விமான நிலையங்கள் ஆணையம் மற்றும் தனியார் துறையினர் வாயிலாக விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்.

•        தற்போது இயங்கும் மற்றும் புதிய விமான நிலையங்களில் பொது-தனியார் கூட்டணி முயற்சியில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பது.

•        எரிவாயு பயன்பாட்டைக் குறைக்கவும், குறைந்த நேரத்தில் பயணிக்கும் வழிகளைக் கண்டறியவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

•        உள்நாட்டு பராமரிப்பு சேவைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரி 18%லிருந்து 5%ஆகக் குறைப்பு.

விமான நிலையங்களின் விரிவாக்க நடவடிக்கைகள்:

மெட்ரோ நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் உட்பட விமான நிலையங்களின் விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளை தேவையின் அடிப்படையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையகம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. இதற்குத் தேவையான நிலங்கள் சார்ந்த பணிகள் மாநில அரசுகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. தேவையின் அடிப்படையில் சென்னை, தில்லி, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் விரிவாக்க நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை மீண்டும் கட்டமைப்பது மற்றும் அது சம்பந்தமான பணிகள்  மேற்கொள்ளப்படுகின்றன.

திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள்:

விண்வெளி மற்றும் விமானத்துறை திறன் கவுன்சில் மேற்கொண்டுள்ள முக்கிய முன்முயற்சிகள்:

•        இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் நிதி உதவியுடன் சண்டிகரில் விமான திறன் பயிற்சிக்காக பலரக திறன் மேம்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

•        மும்பையில் விமான திறன் மேம்பாட்டு மையம் நிறுவப்பட்டுள்ளது.

•        விண்வெளி மற்றும் விமான திறனை ஊக்குவிப்பதற்காக 2017  முதல் நடைபெற்ற அனைத்து ஏரோ இந்தியா நிகழ்ச்சிகளிலும், லக்னோவில் நடைபெற்ற பாதுகாப்புக் கண்காட்சி 2019 நிகழ்ச்சியிலும் இந்தக் கவுன்சில் கலந்து கொண்டது.

•        விண்வெளி மற்றும் விமானத்துறை திறன் கவுன்சிலின் பல்வேறு பணிகளில் சேர்வதற்காக 3589 விண்ணப்பதாரர்கள்/ ஊழியர்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்டுள்ளது.

•        84 பயிற்சி மையங்களுக்கு இந்தக் கவுன்சில் இதுவரை அங்கீகாரம் அளித்துள்ளது.

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் மற்றும் விண்வெளி மற்றும் விமானத்துறை திறன் கவுன்சில் ஆகியவற்றால் நிறுவப்படும் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்:

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744706

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744705

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1744697

****



(Release ID: 1744771) Visitor Counter : 304