நிலக்கரி அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷியை சந்தித்தது ஆஸ்திரேலிய குழு

Posted On: 06 AUG 2021 11:07AM by PIB Chennai

ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரும் மற்றும் சிறப்பு வர்த்தக தூதருமான திரு. டோனி அபோட் தலைமையிலான உயர்நிலைக் குழுவுடன், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, புதுதில்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவின் எரிசக்தி தேவைகள் மற்றும் லட்சிய கொள்கை திட்டங்களுக்கு உதவ ஆஸ்திரேலிய வளங்களை பயன்படுத்துவது உட்பட எரிசக்தி துறையில் விரிவான  முன்னேற்றங்கள் குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வர்த்தக மற்றும் பொருளாதார  உறவுகளை விரிவுபடுத்துவது பற்றி ஆலோசிக்க ஆஸ்திரேலிய குழுவினர் மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷியை சந்தித்தனர்.  திரு. டோனி அபாட்டுடன், இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் திரு பேரி ஓஃபரல், ஆஸ்திரேலிய தூதரகத்தின் பொருளாதார ஆலோசகர் திரு ஹக் பாய்லன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தற்போதைய அரசின் கீழ், நிலக்கிரித்துறையை திறந்து விடுவது பற்றி ஆஸ்திரேலிய குழுவினரிடம் தெரிவித்த மத்திய அமைச்சர், இந்தியாவில் எரிசக்தியின் முக்கிய ஆதாரமாக நிலக்கரி இருப்பதன் முக்கியத்துவத்தையும், இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க சரியான ஊக்கம் அளிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதையும்  எடுத்துக் கூறினார்.

மேற்பரப்பில் நிலக்கரி எடுப்பது, நிலக்கரி படுகையில் மீத்தேன் எடுப்பது போன்ற தொழில்நுட்பங்களை, பகிர்வதில்  இந்தியாவுடன் கூட்டாக செயல்பட வேண்டும் என ஆஸ்திரேலிய குழுவிடம் மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவின் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கான  முக்கியமான கனிமங்களுக்கு, ஆஸ்திரேலியா ஆதாரமாக இருப்பது பற்றியும் மத்திய அமைச்சர் எடுத்துரைத்தார்.

நிலக்கரித்துறை செயலாளர் டாக்டர் அனில் குமார் ஜெயின், சுரங்கத்துறை செயலாளர் திரு அலோக் டாண்டன் மற்றும் இரு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.

*****************



(Release ID: 1743155) Visitor Counter : 188