இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

தேசிய கல்விக் கொள்கை இந்திய இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்தி, இந்தியாவை உலகின் மிகப் பெரிய திறன் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட நாடாக மாற்றமடையச் செய்யும்- திரு.அனுராக் சிங் தாக்கூர்

Posted On: 04 AUG 2021 5:15PM by PIB Chennai

தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில், 'இளைஞர்கள் மேம்பாடு மற்றும் விளையாட்டு முன்னேற்றத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் விளைவுகள்' என்ற தலைப்பின் கீழ் இணைய வழிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு.அனுராக் சிங் தாக்கூர், தேசிய கல்விக் கொள்கை 2020 இளைஞர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்துகிறது மற்றும் இந்தியாவை உலகின் மிகப் பெரிய திறன்சார்ந்த பணியாளர்களைக் கொண்ட நாடாக மாற்றுகிறது. பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தற்சார்பு இந்தியா கனவை நனவாக்கும் வகையில், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, அவர்களுக்கு ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கை 2020 வழிவகை செய்கிறது.

இந்த கருத்தரங்கில் மத்திய இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் திரு.நிஷித் பிரமானிக் (Nisith Pramanik) பேசும்போது, இந்தியாவில் 15 முதல் 29 வயது இடையிலான இளைஞர்கள், தற்போது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 27.5 சதவிகிதமாக உள்ளனர். இது நாட்டில் நான்கில் ஒருவராக உள்ளது. உலகின் இளமையான நாடான இந்தியா மாற்றத்தைக் காணவுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 இளைஞர்களுக்கு முன்னேற்றம் அளிக்கவுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020 கல்வியுடன் சேர்த்து விளையாட்டையும் மேம்படுத்த உதவும். இது மாணவர்கள் உடல் வலிமையுடன் இருக்க வாய்ப்பளிப்பதோடு, அவர்களின் மனம், அறிவு மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1742342

-----



(Release ID: 1742508) Visitor Counter : 188