கலாசாரத்துறை அமைச்சகம்

ஜி20 நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம்: மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லெகி உரை

Posted On: 31 JUL 2021 2:11PM by PIB Chennai

ஜி20 நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு இத்தாலி தலைமை வகித்தது. கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பது; கலாச்சாரம் மூலம் பருவநிலை நெருக்கடிகளை தீர்ப்பது; பயிற்சி மற்றும் கல்வி மூலம் திறன் மேம்பாடு; டிஜிட்டல் மாற்றம் மற்றும் கலாச்சாரத்துக்கான புதிய தொழில்நுட்பங்கள்; வளர்ச்சியின் தூண்டுதலாக கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறைகள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில்  மத்திய கலாச்சாரத்துறை இணையமைச்சர் கலந்துக் கொண்டு, வளர்ச்சிக்கான தூண்டுதலாக கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறைகள் குறித்து, இந்தியாவின் கண்ணோட்டத்தை எடுத்துக் கூறினார்.    பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை வழங்குவதில், கலாச்சாரம் மற்றும்  படைப்பாற்றல் துறைகளின் முக்கியத்துவம், பெண்கள், இளைஞர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவதில் அவற்றின் ஆற்றல் குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.

உத்தரப் பிரதேச அரசின் ஒரே மாவட்டம், ஒரே தயாரிப்பு போன்ற கலாச்சாரம் மற்றும் படைப்பாற்றல் துறைகளை வளர்க்கவும், சுற்றுலா வட்டாரங்களை உருவாக்கவும், யோகா மற்றும் ஆயுர்வேதத்தை ஊக்குவிக்கவும்  இந்தியா எடுத்த பல நடவடிக்கைகளை திருமதி லெகி எடுத்துக் கூறினார்.  

தேசிய மற்றும் உலக அளவில் வலுவான பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தை கருத்தில் கொண்டு, ஜி20 பணி அமைப்பில், கலாச்சாரத்தை அறிமுகப்படுத்துவது பற்றி  பரிந்துரைக்கஜி20 தலைவர்களின் 2021 உச்சிமாநாட்டில்  சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை பிரகடனத்தை, ஜி20 நாடுகளின் கலாச்சாரத்துறை அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741008

*****************


(Release ID: 1741088) Visitor Counter : 288