பாதுகாப்பு அமைச்சகம்

மழையால் சேதமடைந்த அருணாச்சலப் பிரதேசத்தின் யார்லங்- லமாங் சாலையை எல்லை சாலைகள் நிறுவனம் மறுசீரமைப்பு

Posted On: 31 JUL 2021 12:15PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் ஷி யோமி மாவட்டத்திலுள்ள யார்லங்- லமாங் சாலையை எல்லை சாலைகள் நிறுவனம் மறு சீரமைத்துள்ளது. தொடர் மழை காரணமாக ஜூலை 26-27 தேதிகளில் பல்வேறு இடங்களில் இந்த சாலை துண்டிக்கப்பட்டது.

திறன் வாய்ந்த மனித சக்தி மற்றும்  உபகரணங்கள் அடங்கிய பொறியாளர் பணிக்குழு மற்றும் விரைவு மீட்பு குழுவை எல்லை சாலைகள் நிறுவனத்தின் பிரஹ்மாங்க் திட்டப் பிரிவு அனுப்பி வைத்தது. கடுமையான வானிலை நிலவரங்களையும் பொருட்படுத்தாது கனரக உபகரணங்களுடன் 50 வீரர்கள் நாள் முழுவதும் இந்தப் பணியில் ஈடுபட்டனர்.

ராணுவ வீரர்கள், ரேஷன் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதி முதலியவற்றை, இந்த சாலையை அடுத்துள்ள பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காக அவர்களது வாகனங்களும் பாதசாரிகளும் செல்வதற்கு ஜூலை 27 அன்று சாலைகள் மறுசீரமைக்கப்பட்டன. இலகுரக வாகனங்களின் போக்குவரத்து, ஜூலை 28-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முழுவதும் நிறைவேற்றுவதற்கு தேவையான வசதிகளை எல்லை சாலைகள் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1740990

*****************



(Release ID: 1741027) Visitor Counter : 216