சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 40 கோடிக்கும் அதிமான கொவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன
प्रविष्टि तिथि:
28 JUL 2021 10:11AM by PIB Chennai
இந்தியாவில் இதுவரை போடப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 44.61 கோடியைக் கடந்தது. இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், 53,73,43,09 முகாம்கள் மூலம் மொத்தம் 44,61,56,659 தடுப்பூசி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40,02,158 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
பெருந்தொற்று துவங்கிய காலம் முதல் இதுவரை 3,06,63,147 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 41,678 பேர் குணமாகி உள்ளனர். ஒட்டு மொத்த குணமடையும் விகிதம் 97.39 விழுக்காடாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 43,654 அன்றாட புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
தொடர்ந்து 31-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. நம் நாட்டில் கொவிட்-19 தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,436 ஆக உள்ளது. இது நாட்டில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 1.27 விழுக்காடாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நமது நாட்டில் 17,36,857, கொவிட் தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில், இதுவரை சுமார் 46 கோடி (46,09,00,978) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் தற்போது 2.36 விழுக்காடாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.51 விழுக்காடாகவும் உள்ளது. தொடர்ந்து 51-வது நாளாக அன்றாட தொற்று உறுதி விகிதம் 5 விழுக்காட்டுக்கும் குறைவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739748
•••••
(Release ID: 1739748)
(रिलीज़ आईडी: 1739756)
आगंतुक पटल : 276