பாதுகாப்பு அமைச்சகம்
இந்திரா-21: இந்திய- ரஷ்ய கூட்டு ராணுவப் பயிற்சி
Posted On:
27 JUL 2021 10:47AM by PIB Chennai
இந்திய-ரஷ்ய கூட்டு ராணுவப் பயிற்சியின் 12-வது பதிப்பான இந்திரா-2021, வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 13- ஆம் தேதி வரை ரஷ்யாவின் வால்கோகிராடில் நடைபெற உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின்படி சர்வதேச தீவிரவாத குழுக்களுக்கு எதிரான தீவிரவாத எதிர்தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தக் கூட்டுப் பயிற்சி வழிவகுக்கும்.
இந்தப் பயிற்சியில் இரண்டு நாடுகளிலிருந்தும் 250 பேர் பங்கேற்பார்கள். இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்திய மற்றும் ரஷ்ய ராணுவத்துக்கு இடையேயான இயங்கு தன்மை மற்றும் பரஸ்பர தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், இரண்டு நாடுகளின் ராணுவப் படைகளுக்கிடையே சிறந்த செயல்முறைகளை பகிர்ந்துகொள்ளவும் இந்திரா-21 பயிற்சி உதவிகரமாக இருக்கும். பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு கூடுதல் வலு சேர்க்கவும், இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே உள்ள நீண்ட கால நட்பை பலப்படுத்தவும் மேலும் ஒரு மைல்கல்லாக இந்தப் பயிற்சி விளங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739351
(Release ID: 1739407)