உள்துறை அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

Posted On: 26 JUL 2021 3:31PM by PIB Chennai

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்கில் போரில் பங்குபெற்ற துணிச்சல் நிறைந்த அனைத்து வீரர்களையும் தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் நினைவுக் கூர்ந்துள்ள அவர், “உங்களது ஈடு இணையில்லா வீரம், துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவை கார்கிலின் அணுகமுடியாத மற்றும் சவால் மிகுந்த உயரங்களில் மூவர்ண கொடியை மீண்டும் வெற்றிகரமாக பறக்க வைத்தன,” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பெருமையை தக்க வைத்த உங்களின் அர்பணிப்புக்கு நாடு நன்றியுடன் தலை வணங்குகிறது,” என்று அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.

                                                                                                                                          -----(Release ID: 1739187) Visitor Counter : 232