சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் குறித்து அமைச்சரின் பதில்

Posted On: 26 JUL 2021 3:16PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமுதாயத்தினரான இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள் மற்றும் சமணர்களின் நலனுக்காக, இப்பிரிவுகளில் உள்ள மாணவர்களுக்காக மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகை திட்டங்கள் மற்றும் பேகம் ஹஸ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை உள்ளிட்டவற்றை சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

கடந்த ஏழு வருடங்களில், தேசிய கல்வி உதவித்தொகை தளம் மற்றும் நேரடி பலன் பரிவர்த்தனை மூலம் 4.52 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் 53 சதவீதத்திற்கும் மேற்பட்டவர் பெண்கள் ஆவர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்தமுள்ள சிறுபான்மையினரில் 3.61 சதவீதம் புத்த மதத்தினர், 11.9 சதவீதம் கிறித்துவர்கள், 1.9 சதவீதம் சமணர்கள், 73.66 சதவீதம் இஸ்லாமியர்கள், 0.02 சதவீதம் பார்சிக்கள் மற்றும் 8.91 சதவீதம் சீக்கியர்கள் உள்ளனர்.

சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை மூலம் பலனடைந்தவர்களை பொருத்தவரை இஸ்லாமியர்கள் 76.11 சதவீதமாகவும், கிறித்துவர்கள் 12.04 சதவீதமாகவும், சீக்கியர்கள் 7.88 சதவீதமாகவும், புத்த மதத்தினர் 2.70 சதவீதமாகவும், சமணர்கள் 1.23 சதவீதமாகவும், பார்சிக்கள் 0.014 சதவீதமாகவும் உள்ளனர்.

சிறுபான்மையினர் அதிகமுள்ள பகுதிகளில் சமூக பொருளாதார சொத்துக்களை உருவாக்கும் நோக்கில் பிரதமரின் ஜன் விகாஸ் திட்டத்தை சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

2018 மே மாதம் சீரமைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பலன் பெறும் மாவட்டங்களில் எண்ணிக்கை 196 மாவட்டங்களில் இருந்து 308 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 870 வட்டங்கள், 321 நகரங்கள் மற்றும் 109 மாவட்ட தலைநகரங்களை இது உள்ளடக்கும். மேலும் விவரங்களை http:// www.minorityaffairs.gov.in எனும் தளத்தில் பார்க்கலாம்.

சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி பெற்ற அமைப்பான மௌலான ஆசாத் கல்வி நிறுவனம், சிறுபான்மை சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு பணி சார்ந்த திறன் வளர்த்தல் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

உத்தரப் பிரதேசம் உட்பட நாடு முழுவதும் 371 பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. உத்தரப் பிரதேசத்தின் 22 மாவட்டங்களில் 65 பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பயிற்சி பெறுவர்களின் எண்ணிக்கை 9620 ஆகும். பயிற்சி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739045

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739043

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739042

                                                                               ------

 



(Release ID: 1739179) Visitor Counter : 238