எஃகுத்துறை அமைச்சகம்
இரும்பு மற்றும் எஃகின் இருப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள்: மக்களவையில் மத்திய அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங் தகவல்
Posted On:
26 JUL 2021 2:00PM by PIB Chennai
மத்திய எஃகு அமைச்சர் திரு ராம் சந்திர பிரசாத் சிங், மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்கள் பின்வருமாறு:
எஃகுத் துறை, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட துறையாகும். உற்பத்தி, ஏற்றுமதி/ இறக்குமதி போன்ற வணிகரீதியான முடிவுகள் எஃகு நிறுவனங்களால் எடுக்கப்படுகின்றன. எனினும், இரும்பு மற்றும் எஃகின் இருப்பை அதிகரிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தயாரிப்பாளர்களின் உற்பத்தி, திறன் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டுமல்லாமல் சுரங்கம், இரும்புத் தாதுவின் இருப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தியை உறுதி செய்வதற்கான கனிம கொள்கை, பறிமுதல் செய்யப்பட்ட ஒடிசாவின் சுரங்கங்களை மத்திய/ மாநில பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் போன்றவை இதில் அடங்கும். 2021-22 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், உலோகக் கலவை அல்லாத, உலோகக் கலவையினாலான மற்றும் எவர்சில்வர் பொருட்கள் மீதான சுங்க வரி ஒரு சீராக, 7.5% ஆக குறைக்கப்பட்டது.
மேலும் மார்ச் 31, 2022 வரை எஃகு கழிவுகளுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழுமை அடைந்த எஃகின் பயன்பாட்டில் உள்நாட்டு உற்பத்தியின் பங்கு கடந்த மூன்று ஆண்டுகளை விட நடப்பு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2018-19 ஆம் ஆண்டு 92.1% ஆக இருந்த இந்த பங்கு, 2019-20 ஆம் ஆண்டில் 93.2%ஆகவும், 2020-21 ஆம் ஆண்டில் 95.0%ஆகவும் இருந்தது. 2021 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் முதற்கட்ட தரவுகளின் படி இந்தப் பங்கு 95.3% ஆக உள்ளது. 2019-20 முதல் முழுமை அடைந்த எஃகின் நிகர ஏற்றுமதியாளராக இந்தியா விளங்குகிறது. நாட்டின் எஃகு தேவை, உள்நாட்டு உற்பத்தியின் மூலம் நிறைவடைந்து வருவதுடன், கடந்த மூன்று ஆண்டுகளில் இறக்குமதியின் சதவீதம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739003
******
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738999
******
(Release ID: 1739083)
Visitor Counter : 218