பிரதமர் அலுவலகம்

கார்கில் வெற்றி நாளில், தமது இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

இடுகை இடப்பட்ட நாள்: 26 JUL 2021 11:34AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தேசத்தை காக்கும் பணியில் கார்கிலில் தமது இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு, கார்கில் வெற்றி நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ நாம் அவர்களது தியாகத்தை நினைவு கூர்கிறோம். நாம் அவர்களது வீரத்தை நினைவு கூர்கிறோம். தேசத்தை காக்கும் பணியில், கார்கிலில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும், கார்கில் வெற்றி நாளான இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களது துணிவு ஒவ்வொரு நாளும் நமக்கு உத்வேகம் ஊட்டுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறியவற்றை இங்கு பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1738969) வருகையாளர் எண்ணிக்கை : 305