சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவின் கொவிட் தடுப்பூசி எண்ணிக்கை: 43 கோடியைக் கடந்து மைல்கல் சாதனை

Posted On: 25 JUL 2021 10:26AM by PIB Chennai

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 43 கோடியைக் கடந்து மைல்கல் சாதனையைப் படைத்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 52,72,431 முகாம்களில் 43,31,50,864 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 51,18,210 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,05,43,138 பேர் கொவிட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்கடந்த 24 மணி நேரத்தில் 39,972 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் விழுக்காடு 97.36 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 39,742 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர்ந்து 28 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,08,212 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 1.30 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 17,18,756 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 45,62,89,567 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.24 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.31 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 34 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், 48 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738751

 

----


(Release ID: 1738804) Visitor Counter : 247