கலாசாரத்துறை அமைச்சகம்

வசுதைவ குடும்பகம்’ எனும் செய்தியை புத்தரின் போதனைகள் வலியுறுத்துகின்றன: திரு ஜி கிஷண் ரெட்டி

Posted On: 24 JUL 2021 4:04PM by PIB Chennai

ஒட்டுமொத்த உலகமே ஒரு குடும்பம் என்பதை பிரதிபலிக்கும் ‘வசுதைவ குடும்பகம்’ எனும் செய்தியை புத்தரின் போதனைகள் வலியுறுத்துகின்றன என்றும் புத்த மதத்தினர் மட்டுமில்லாது அனைவருக்கும் வழங்குவதற்கான பல விஷயங்கள் புத்த மதத்தில் இருப்பதாகவும் மத்திய கலாச்சார அமைச்சர் திரு ஜி கிஷண் ரெட்டி கூறினார்.

‘ஆசாத பூர்ணிமா - தர்ம சக்கர தினத்தை’ முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள காணொலி செய்தியில், இந்த நாள் குரு பூர்ணிமா என்றும் கொண்டாடப்படுவதாக கூறினார். “இந்த நாளன்று நமது குருக்களுக்கு நாம் மரியாதையையும் நன்றியையும் தெரிவிக்கிறோம். ஆசாத பூர்ணிமா உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினருக்கு மட்டுமில்லாது, ஒட்டுமொத்த மனித குலத்திற்கே முக்கியமான தினம்,” என்று அமைச்சர் கூறினார். 

2,500-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னர் இந்த தினத்தன்று பின்னாளில் தமது சீடர்களாக மாறிய ஐந்து சக பணியாளர்களுக்கு சார்நாத்தில் தமது முதல் உரையை ஆசிரியரான புத்தர் வழங்கினார். புத்தர் ஞானமடைந்த பின்னர் மனிதகுலமும் அதன் மூலம் பலனடைந்ததை அவர் உறுதி செய்தார். புத்த மதத்திற்கு, இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்று அவர் மேலும் கூறினார். 

சர்வதேச புத்த மத கூட்டமைப்புடன் இணைந்து சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகள் குழு இந்த வருடம் நவம்பரில் இந்தியாவில் சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக திரு கிஷண் ரெட்டி கூறினார். “புத்தமதம் குறித்த சிறப்பான நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் இருந்து அறிஞர்கள் அழைக்கப்படுவார்கள். தனது 75-வது சுதந்திர தினத்தை இந்த வருடம் இந்தியா கொண்டாடும் போது, புத்தரின் பங்களிப்பும் கொண்டாடப்படும்,” என்று அவர் தெரிவித்தார். 

புத்த மதத்தின் தாய்வீடான இந்தியா, தங்களது பாரம்பரியம் மற்றும் ஞானத்தை புத்த மதத்தினர் வெளிப்படுத்துவதற்கு ஆதரவு தரும் என்று அமைச்சர் கூறினார். “இந்தியாவின் புத்தமத பாரம்பரியத்தை வளர்த்தெடுக்கவும், ஊக்குவிக்கவும் சிறப்பான முயற்சிகளை பிரதமர் எடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள புத்த மதத்தினர் கண்டு களிக்கும் வகையில் பல்வேறு பண்டைய இடங்கள் சீரமைக்கப்படுகின்றன,” என்று அவர் கூறினார். 

குரு பூர்ணிமாவை முன்னிட்டு இரு கலாச்சார ஜாம்பவான்களான சரோஜா வைத்தியநாதன் மற்றும் உமா சர்மா ஆகியோரின் இல்லங்களுக்கு திரு கிஷண் ரெட்டி சென்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738581 

***************
 



(Release ID: 1738646) Visitor Counter : 328