பாதுகாப்பு அமைச்சகம்

குஜராத்தின் உமர்காமில் சிக்கலில் இருந்த எம்.வி.கஞ்சனின் 12 பணியாளர்களை இந்திய கடலோர காவல்படை மீட்டது

Posted On: 22 JUL 2021 11:31AM by PIB Chennai

சீரற்ற வானிலைக்கு மத்தியில் மின்சாரம் இல்லாததால் எம்.வி.கஞ்சன் கப்பல் சிக்கித் தவித்தது. இந்திய கடலோர காவல்படையின் (ஐ.சி.ஜி) எம்.வி. ஹெர்மீஸின் விரைவான நடவடிக்கையால் 12 பேரும் மீட்கப்பட்டனர். மேலும் சில ஐ.சி.ஜி கப்பல்கள் உதவிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

ஜூலை 21, 2021 அன்று குஜராத்தின் உமர்காமில் சிக்கித் தவித்த மோட்டார் கப்பல் (எம்.வி) கஞ்சனின் 12 பணியாளர்களையும், இந்திய கடலோர காவல்படை மீட்டது. மும்பை கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (எம்.ஆர்.சி.சி), எம்.வி. காஞ்சன் கப்பல் எரிபொருள் மாசுபாட்டால் சிக்கித் தவிக்கிறது என்றும் இதனால் எஞ்சின் செயல்படவில்லை என்றும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் மின்சாரமும் இல்லை என்றும் மும்பை டி.ஜி தொடர்பு மையத்திலிருந்து ஜூலை 21 மதியம்   தகவல் வந்தது. அன்று மாலை, கப்பலின் மாஸ்டர், எஃகு சுருள்களை ஏற்றி வந்த எம்.வி. கஞ்சன், நங்கூரத்தை கைவிட்டு, ஸ்டார்போர்டு (வலது) பக்கமாக சாய்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

எம்.ஆர்.சி.சி மும்பை உடனடியாக சர்வதேச பாதுகாப்பு வலையை (ஐ.எஸ்.என்) செயல்படுத்தியது, எம்.வி. ஹெர்மீஸ் கப்பல் உடனடியாக சிக்கலிருக்கும் கப்பலை நோக்கித் திருப்பப்பட்டது. கடல் கொந்தளிப்பாக இருக்கும் சூழலிலும், எம்.வி.ஹெர்மீஸ் துணிந்து செயல்பட்டு, எம்.வி. காஞ்சனின் 12 பணியாளர்களையும் ஓர் இரவில் விரைவாக மீட்டது.

சிக்கித் தவிக்கும் கப்பலுக்கு உதவுவதற்காக அவசர தோண்டும் கப்பல் (ஈ.டி.வி) வாட்டர் லில்லி அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737631(Release ID: 1737643) Visitor Counter : 87