பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம் (கார்ப்பரேட்டுகளுக்கான நொடித்துப் போதல் தீர்க்கும் செயல்முறை) கட்டுப்பாடுகள் 2016-இன் விதிமுறைகளில் திருத்தம்
Posted On:
21 JUL 2021 10:28AM by PIB Chennai
நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான இந்திய வாரியம், நொடித்துப்போதல் மற்றும் திவாலாதலுக்கான (பெருநிறுவன நபர்களுக்கான நொடித்துப் போதல் தீர்க்கும் செயல்முறை) (இரண்டாவது திருத்தம்) கட்டுப்பாடுகள் 2016-இன் விதிமுறைகளில் திருத்தம் செய்து, ஜூலை 14ஆம் தேதி வெளியிட்டது.
பெரு நிறுவனங்களில் நொடித்துப் போதல் செயல்முறையில் ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
a) பெருநிறுவன கடனாளர், நொடித்துப் போவதற்கு முன்பு நிறுவனத்தின் பெயர் அல்லது பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியை மாற்றி இருக்கலாம். புதிய பெயர் அல்லது பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரியுடன் தொடர்பு கொள்வது பங்குதாரர்களுக்கு கடினமாக இருக்கக் கூடும். திருத்தி அமைக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி, திவாலான நிலையை தொழில் நிபுணர் ஆய்வு செய்து, நொடித்துப் போகும் நிலை தொடங்குவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அனைத்து முன்னாள் பெயர்களையும் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி/ முகவரிகளையும், தற்போதைய பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட அலுவலக முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட வேண்டும்.
b) இடைக்கால தீர்வுக்கான தொழில்சார் அல்லது தீர்வுக்கான நிபுணர் தமது பணிகளை நிறைவேற்றுவதில் உதவுவதற்காக பதிவு செய்த மதிப்பீட்டாளர்கள் உட்பட எந்த ஒரு நிபுணரையும் நியமிக்கலாம். திருத்தி அமைக்கப்பட்ட விதிகளின்படி அத்தகைய நிபுணரின் சேவைகள் தேவை என்றும் பெருநிறுவன கடனாளரிடம் அது போன்ற சேவைகள் கிடைக்காது என்றும் இடைக்கால தீர்வுக்கான வல்லுநர் அல்லது தீர்வுக்கான நிபுணர் கருதினால் பதிவு செய்த மதிப்பீட்டாளர்களைத் தவிர வேறு ஒரு தொழில்சார் நிபுணரையும் நியமிக்கலாம். இதுபோன்ற நியமனங்கள் வெளிப்படை தன்மை வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
c) பெருநிறுவன கடனாளர், பொருள் தவிர்ப்பு பரிவர்த்தனைகள் அதாவது முன்னுரிமை பரிவர்த்தனைகள், குறிப்பிடப்படாத பரிவர்த்தனைகள், மோசடி வர்த்தகம் மற்றும் தவறான வர்த்தகம் வாயிலாக விண்ணப்பங்களை தாக்கல் செய்திருக்கிறார்களா என்பதை கண்டறிவது தீர்வுக்கான நிபுணரின் கடமை. பெருநிறுவன கடனாளியை மறுசீரமைப்பு அதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும் இத்தகைய பரிவர்த்தனைகளினால் இழந்த மதிப்பை திரும்பப் பெறுவது மட்டுமல்லாமல் பெருநிறுவன கடனாளரின் மன அழுத்தமும் குறைக்கப்படுகிறது. சிறப்பான கண்காணிப்பிற்காக தீர்வுகாண தொழில்சார் நிபுணர் வாரியத்தின் மின்னணு தளத்தில் தமது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் பெருநிறுவன நொடித்துப் போதல் தீர்வுக்கான செயல்முறை படிவம் 8-ஐ சமர்ப்பிக்குமாறு திருத்தப்பட்ட விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் இதன் வடிவமைப்பை வாரியம் குறிப்பிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள ஒவ்வொரு பெருநிறுவன நொடித்துப் போதல் தீர்வக்கான செயல்முறை அல்லது ஜூலை 14,2021 அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் செயல் முறைகளுக்கு இந்த படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
திருத்திமைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் ஜூலை 14, 2021 முதல் அமலுக்கு வரும். www.mca.gov.in, www.ibbi.gov.in ஆகிய இணையதளங்களிலும் இந்த கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737438
----
(Release ID: 1737479)
Visitor Counter : 347