சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 அண்மைத் தகவல்கள்

Posted On: 20 JUL 2021 9:18AM by PIB Chennai

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 41.18 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும், இதுவரை 3,03,53,710 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.37% ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 45,254 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 30,093 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன; 125 நாட்களில் இது மிகக் குறைவு.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,06,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 117 நாட்களில் இது மிகக் குறைவு.

இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.30% ஆகும்.

வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.06% ஆக உள்ளது.

தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 29 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 1.68%, ஆகப் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 44.73 கோடி ஆகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737041

******

(Release ID: 1737041)



(Release ID: 1737071) Visitor Counter : 180