குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

செகந்தராபாத் ராணுவ முகாம் பகுதியில் உள்ள சாலைகளை மூடுவது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு பாதுகாப்பு இணை அமைச்சருக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தல்

Posted On: 18 JUL 2021 5:57PM by PIB Chennai

செகந்தராபாத் ராணுவ முகாம் பகுதியைச் சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நலனிற்காக அங்குள்ள பொது சாலைகளை மூடுவது தொடர்பான பிரச்சினையை ஆய்வு செய்யுமாறு பாதுகாப்பு இணை அமைச்சர் திரு அஜய் பட்டிற்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அறிவுரை வழங்கியுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இணையமைச்சர், குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று அவரை சந்தித்தபோது இது தொடர்பாக திரு நாயுடு பேசினார்.

செகந்தராபாத் ராணுவ முகாம் பகுதியில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் இடர்பாடுகளை குறைப்பதற்காக, சாலைகள் மூடப்படும்  பிரச்சினையை விரிவாக ஆராயுமாறு யோசனை தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிற்கு தெலங்கானா அரசு சார்பாக அண்மையில் அனுப்பப்பட்டுள்ள கடிதம் பற்றியும் திரு வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

இது சம்பந்தமாக ஆய்வு மேற்கொண்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குடியரசு துணைத் தலைவரிடம் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736602

 

-----



(Release ID: 1736610) Visitor Counter : 196