அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தோன்றி, மறையும் நட்சத்திரங்களின் குழுவை வானியலாளர்கள் கண்டுபிடிப்பு

Posted On: 16 JUL 2021 1:12PM by PIB Chennai

ஓர் பழைய ஒளிப்படத் தகட்டின் சிறிய பகுதியில் ஒன்பது நட்சத்திரங்கள் போன்ற பொருட்கள் அரை மணி நேரத்தில் தோன்றி மறைவதை சர்வதேச வானியலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வானியலாளர்கள் ஒன்றிணைந்து, இரவு வானத்தின் பழைய படங்களை புதிய நவீன படங்களுடன் ஒப்பிட்டு, தோன்றி, மறையும் விண்வெளிப் பொருட்களை ஆய்வு செய்து, இயற்கைக்கு மாறான நிகழ்வுகளை பதிவு செய்து, பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்ய இது போன்ற நிகழ்வுகளை ஆழமாக ஆராய்கின்றனர்.

ஸ்வீடன், ஸ்பெயின், அமெரிக்கா, உக்ரைன் மற்றும் இந்தியாவின் கண்காணிப்பு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் அலோக் சி குப்தா உள்ளிட்ட விஞ்ஞானிகள், 1950 ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இரவு வானத்தின் படங்களை எடுக்க கண்ணாடி தகடுகளைப் பயன்படுத்திய புகைப்படத்தின் ஆரம்ப வடிவத்தை ஆராய்ந்தனர். அரை மணி நேரத்திற்குப் பிறகு புகைப்படங்களில் காணப்படாத  நிலையற்ற  நட்சத்திரங்களை அவர்கள் கண்டனர். அதன்பிறகு இந்த நட்சத்திரங்கள் தென்படவில்லை. இது போன்ற நிகழ்வு ஏற்படுவது வானியல் வரலாற்றில் இதுவே முதல் முறை.

 

இதற்கான காரணத்தை வானியலாளர்கள் கண்டறியவில்லை.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாக இயங்கும் நைனிடாலில் உள்ள கண்காணிப்பு அறிவியல்களுக்கான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அலோக் சி. குப்தா பங்கேற்றுள்ள இந்த ஆய்வு, “இயற்கையின் அறிவியல்பூர்வ அறிக்கைகள்என்ற சஞ்சிகையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1736106

*****************

 


(Release ID: 1736164) Visitor Counter : 299