சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

“இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II”: ஏற்பாடுகள் குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உடன் மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு

Posted On: 15 JUL 2021 2:50PM by PIB Chennai

அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட ரூ. 23,123 கோடி செலவிலான இந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II”-இன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதார அமைச்சகம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று ஆய்வு செய்தது.

2021-22-ஆம் நிதியாண்டிற்கான இந்த புதிய திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த ஜூலை 8-ஆம் தேதி அனுமதி அளித்தது. 2021 ஜூலை 1 முதல் 2022 மார்ச் 31 வரை இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவசரகால கொவிட்-19 எதிர்வினை தொகுப்பின் 2-ஆம் பகுதியில் மத்திய துறை மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெற்ற திட்டங்கள் என்னும் இரண்டு கூறுகள் இடம்பெற்றுள்ளன.

கொவிட்-19 தொற்றின் எதிர்வினையை சீர் செய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு கொவிட் மேலாண்மையின் பல்வேறு அம்சங்கள் பற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. மத்திய அரசு விரைவாக நிதியை ஒதுக்குவதற்கு ஏதுவாக தங்களது செலவின திட்ட முன்மொழிவுகளை விரைந்து அனுப்புமாறும் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

கொவிட் மேலாண்மைக்காக மருந்துகளைக் கொள்முதல் செய்வதும், இந்தத் தொகுப்பின் அத்தியாவசிய அம்சம் என்று சுட்டிக் காட்டப்பட்டது. இதற்காக, கொள்முதல் மற்றும் கையிருப்பு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.‌ உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம். மருந்தின் கையிருப்பு மற்றும் கட்டணங்களின் அடிப்படையில் மாநிலங்கள் தங்களது சொந்த மதிப்பீடுகளை அளிக்க வேண்டும்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கூடுதல் செயலாளரும், திட்ட இயக்குநருமான திருமிகு வந்தனா, கூடுதல் செயலாளர் திரு விகாஸ் ஷீல், மத்திய சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735838

*****************



(Release ID: 1735873) Visitor Counter : 187