தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நியூஸ் ஆன் ஏர் செயலியின் தரவரிசையில் கொடைக்கானல் அகில இந்திய வானொலி முன்னேற்றம்

Posted On: 15 JUL 2021 2:47PM by PIB Chennai

நியூஸ் ஆன் ஏர் செயலியில் அகில இந்திய வானொலி நேரலை ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ள இந்திய நகரங்களின் தரவரிசையில் சென்னையை பின் தள்ளி ஐதராபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. புனே, பெங்களூரு ஆகியவை தொடர்ந்து நான்காவது வாரமாக முறையே 1 மற்றும் 2-ஆம் இடம் வகிக்கின்றன. ஜெய்ப்பூர் 8-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், போபால் 9-ஆம் இடத்திற்கு சரிந்துள்ளது.

அகில இந்திய வானொலியின் தரவரிசையில் மிகப்பெரும் மாற்றமாக கொடைக்கானல் வானொலி, 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ரெயின்போ கன்னடா காமன்பிலு, 4-வது இடத்திலும், புனே வானொலி, 5-வது இடத்திலும் உள்ளன.

பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்- ல் அகில இந்திய வானொலியின் சுமார் 240 சேவைகள் நேரலையாக ஒலிபரப்பப்படுகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8000 நகரங்களில் வசிக்கும் மக்கள் இந்த செயலியின் வாயிலாக அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகின்றனர்.

ஜூன் 16 முதல் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை அமைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735836

*****************


(Release ID: 1735860) Visitor Counter : 278