மத்திய அமைச்சரவை

ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதியில் மாநில மற்றும் மத்திய வரிகளின் தள்ளுபடியை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 14 JUL 2021 3:56PM by PIB Chennai

ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதியில் மாநில மற்றும் மத்திய வரிகளின் தள்ளுபடியை  2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தொடர  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் பல முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான ஏற்றுமதியில் மாநில மற்றும் மத்திய வரிகளின் தள்ளுபடியை, ஜவுளித்துறை அமைச்சகம் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி அறிவித்த அதே வீதத்தில்,   2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தொடர  ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மாநில மற்றும் மத்திய வரி தள்ளுபடியின் கீழ் வராத இதர ஜவுளி தயாரிப்புகள் ( அத்தியாயங்கள் - 61, 62 & 63 நீங்கலாக) வரி தள்ளுபடியின் கீழ் பயன்களை பெற  தகுதியானவை ஆகும். வர்த்தகத்துறை இறுதி செய்த இதர தயாரிப்புகளும் இந்த பயன்களைப் பெறும்.

ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான இந்த வரித் தள்ளுபடி தொடர்வது உலகளாவிய போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு நிலையான மற்றும் கணிக்கக்கூடிய கொள்கை முறையை உறுதி செய்யும் மற்றும் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும். மேலும், இது ஏற்றுமதிக்கான தொடக்க நிறுவனங்கள் மற்றும்  தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் மற்றும் லட்சக்கணக்கான வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

ஏற்றுமதி தயாரிப்புகளுக்கு திருப்பி செலுத்தப்படும் வரி:

ஏற்றுமதி பொருட்களுடன் வரியையும் ஏற்றுமதி செய்யக்கூடாது என்பது உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறை. இது சர்வதேச சந்தையில் ஏற்றுமதியாளர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பு. மேலும், இறக்குமதி வரிகள் மறறும் ஜிஎஸ்டி வரிகள் பொதுவாக திருப்பி அளிக்கப்படும். ஆனால் மத்திய, மாநில மற்றும் உள்ளூர் வரிகள் ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி அளிக்கப்படுவதில்லை. இந்த வரிகள் ஏற்றுமதி செய்யப்படும் பொருளின் விலையில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய ஆடைகளின் விலைகள் அதிகரிப்பதால், சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கு சிரமமாக உள்ளது.

இந்த வரிகளை ஏற்றுமதியாளர்களுக்கு திருப்பி அளிப்பதற்காக மாநில வரி தள்ளுபடி திட்டத்தை ஜவுளி அமைச்சகம் கடந்த 2016ம் ஆண்டு கொண்டு வந்தது.

மத்திய, மாநில வரிகளையும் சேர்த்து தள்ளுபடி செய்யும் புதிய திட்டம் 2019ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தை 2024ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை தொடர ஜவுளித்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இத்திட்டம் கூடுதல் முதலீட்டையும்லட்சக்கணக்கான பெண்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735370

*****************(Release ID: 1735425) Visitor Counter : 323